Author Topic: ~ குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா... மருத்துவ குணங்கள் ~  (Read 836 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா... மருத்துவ குணங்கள்




குழந்தைகளின் வளர்ச்சிக்கு:

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்
* சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
* நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு.
இதன் கிளைகள் வழுவழுவென்று காணப்படும். இலைகள் தடித்து காணப்படும். கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.
கொய்யா, முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது..
கொய்யாப்பழம் கோடைக்காலங்களில்தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
கொய்யாவில் பலவகைகள் உள்ளன. இதன் பழங்கள் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.
தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒருசில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.
கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்

மருத்துவப் பயன்கள்:
கொய்யா சாப்பிட்டால் திரும் நோய்கள்

மலச்சிக்கல் தீர
வயிற்றுப்புண் ஆற
கல்லீரல் பலப்பட
நீரிழிவு நோயாளிகளுக்கு
இரத்தச்சோகை மாற
இதயப் படபடப்பு நீங்க
குழந்தைகளின் வளர்ச்சிக்கு
கொழுப்பைக் குறைக்க இதை இன்னும் தெளிவாக அறியவேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் நான் கூறுகிறேன்