Author Topic: ஆற்றில்/கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?  (Read 14470 times)

Offline Global Angel

பொதுவாக நீர் நிலைகளை கனவில் பார்த்தாலே நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சில நூல்களில் இது வம்ச விருத்திக்கான அடையாளம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடலில் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல் கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறார் என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது. உதாரணமாக தற்போது அவர் ஓட்டு வீட்டில் இருந்தால் மாடி வீட்டிற்கு மாறுவார்