
பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.
மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.