Author Topic: ~ ஆரோக்கியம் பெற நூறாண்டுகள் வாழ?ஆரோக்கிய பொடிக் குழம்பு ~  (Read 980 times)

Online MysteRy

ஆரோக்கியம் பெற நூறாண்டுகள் வாழ?



இதோ நம் முன்னோர்கள் நோயை விரட்டி கையில் ஊன்றுகோல் கூட இல்லாமல் ஹாயாக வாழ வழி செய்யும் சூப்பர் ரெசிபி!

ஆரோக்கிய பொடிக் குழம்பு


தேவை:

மணத்தக்காளி வற்றல் - 1 மேஜைக்கரண்டி

தக்காளி சாறு - 1 மேஜைக்கரண்டி

கெட்டிப்புளிச்சாறு - 1 மேஜைக்கரண்டி

வெல்லக் கரைசல் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

தனியா - 2 தேக்கரண்டி

ஓமம் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

திப்பிலி - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் - 1/4 கப்

கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை தாளிதம் செய்ய


செய்முறை:

உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, தனியா, சீரகம், திப்பிலி, ஓமம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து, பிறகு அனைத்தையும் கலந்து பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளிதம் செய்து இத்துடன் மணத்தக்காளி வற்றலையும் சேர்த்து புரட்டவும். தக்காளி சாற்றைச் சேர்க்கவும். புளிக் கரைசலையும், வெல்லச்சாறு, மற்றும் மஞ்சள் தூள் மற்றும் உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சாதத்தோடு பிசைந்து சாப்பிட வேண்டுமா? சூப்பர் குழம்பு! இட்லி; தோசைக்கு தொட்டுக்கவா? நான் இருக்கிறேன் என்கிறது இந்த பண்டம். பூரி மற்றும் சப்பாத்திக்கும் நான் சளைத்தது இல்லை என்று சவால் விடும் குழம்பு.