Author Topic: ~ நீங்கள் கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா? ~  (Read 729 times)

Offline MysteRy

நீங்கள் கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா?




கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாம் கணினியை வைத்திருக்கும் இடம், உட்காரும் நிலை, கீபோர்டு, மெளஸை தவறாகக் கையாளுதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது 100 கோடிக்கும் அதிகமான கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சத்தில், அளவான ஒளியுடன், ஒன்றரை அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித் திரையும், பயன்படுத்த எளிதான கீபோர்டு மற்றும் மௌசும் இருக்க வேண்டும்.
கீபோர்ட், மௌஸ் உபயோகிக்கும்போது மணிக்கட்டை வளைக்காமல் நேராக கைகளை  வைத்தும், முதுகுப்பகுதி ஒரே நேர் கோட்டில் இருக்கும்படியாக (படம்)  சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாக அமர்ந்திருக்காமல் அரை மணி நேரத் திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடந்து பின் அமர்வதும், கைகளை வளைத்து சிறிது பயிற்சி செய்வதும் நல்லது. அதேபோல அடிக்கடி கண் இமைகளை மூடித்திறப்பதும் கண்களுக்கு நல்லது என்கின்றனர்