கற்பனைக்கு விலக்களித்து ...
கவிதைக்கு விடுமுறை கொடுத்திருந்தேன்...
சில நாட்களாய்....
மனதில் சிறு குழப்பம் ...
மனம் விரும்பும் தமிழை ....
உயர் தமிழை... உயிர் தமிழை ....
சுயநலம் கொண்டு புறக்கணிப்பது தகுமா ?? ...
முற்றிலும் அநியாயமே என.....
சத்தமாய் உரைத்தது மனம்...
ஆதலால் தமிழின் மீது கொண்ட ...
தீரா காதலால்....
மீண்டும் கிறுக்க முடிவெடுத்து...
கரு தேடும் பயணத்தில் மனம்....