Author Topic: மருத்துவம்  (Read 5743 times)

Offline Global Angel

மருத்துவம்
« on: August 09, 2012, 02:49:58 AM »

மருத்துவம்


மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல் நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல் நல அறிவியல், உயிர் மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறன குணப்படுத்தல் பெரும்பாலும், மருந்துகள், அறுவை மருத்துவம் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவையாகவே உள்ளன.


வரலாறு




மருத்துவத்துடன் தொடர்புடைய, பண்டைக் கிரேக்கச் சின்னமான ஒற்றைப் பாம்புடன் கூடிய அஸ்கிளெப்பியஸ் கோல். மருத்துவத் தொடர்புள்ள பல தற்காலக் கழகங்களும், நிறுவனங்களும் அஸ்கிளெப்பியஸ் கோலைத் தமது சின்னங்களில் சேர்த்துள்ளன.


வரலாற்றுக்கு முந்திய கால மருத்துவத்தில் தாவரங்கள், விலங்கு உறுப்புக்கள், கனிமங்கள் அடங்கியிருந்தன. பல வேளைகளில் இவை சடங்குகளோடு மந்திர சக்தி வாய்ந்த பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற ஆன்மீக முறைகளில், ஆன்மவாதம் (animism), ஆன்மீகவாதம் (spiritualism), ஆவித்தொடர்பு (shamanism), குறிசொல்லல் (divination) என்பவை அடங்கும். மருத்துவ மானிடவியல் பல்வேறு வரலாற்றுக்கு முந்திய மருத்துவ முறைகள் குறித்தும் அவற்றுக்கு சமூகத்துடன் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆய்வு செய்கிறது.
 
மருத்துவம் குறித்த பழைய பதிவுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆயுள்வேத மருத்துவம், பண்டை எகிப்திய மருத்துவம், மரபுவழிச் சீன மருத்துவம், அமெரிக்காக்களில் வழங்கிய மருத்துவ முறைகள், பண்டைக் கிரேக்க மருத்துவம் என்பவை தொடர்பில் கிடைத்துள்ளன. பழங்காலக் கிரேக்க மருத்துவர்களான ஹிப்போக்கிரட்டீஸ், காலென் ஆகியோர் பிற்கால மருத்துவம் பகுத்தறிவு சார்ந்த முறையில் வளர்வதற்கு அடித்தளமிட்டனர். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இஸ்லாமிய மருத்துவர்கள் இத்துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். ஹிபோக்கிரட்டீசினதும், காலெனினதும் நூல்களின் அரபி மொழி மொழிபெயர்ப்புக்கள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன. தற்கால மருத்துவத்தின் தந்தை எனப்படும் பொலிமத் அவிசென்னா, அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அபுல்காசிஸ், சோதனை அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அவென் சோவார், சுற்றோட்ட உடற்றொழிலியலின் தந்தை என வழங்கப்படும் இபின் அல் நாபிஸ், அவெரோஸ் என்போர் இஸ்லாமிய மருத்துவத்தின் முன்னோடிகள் ஆவர். குழந்தை மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரேசஸ் என்பார், மேல் நாட்டு மத்தியகால மருத்துவத்தில் செல்வாக்குடன் விளங்கிய உடல்நீர்மவியம் (humorism) என்னும் கிரேக்க மருத்துவக் கோட்பாட்டை முதன் முதலில் பிழை எனக் காட்டினார்.





மருத்துவர் நோயாளிக்கு மருத்துவம் செய்கிறார். லூவர் அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்ஸ்.
                    

Offline Global Angel

Re: மருத்துவம்
« Reply #1 on: August 09, 2012, 02:59:39 AM »
அறிவியல் மருத்துவத்தின் எழுச்சி


தற்கால மருத்துவத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் 1800 களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய போன்ற மேற்கு நாடுகளில் தொடங்கியது. அக்காலத்தில் பொது மருத்துவம் என்று ஒன்று இல்லாமல் பல மருத்துவ பிரிவுகள் இருந்தன. அந்தக் காலப்பகுதியில் Germ theory of disease, Antibiotic, மரபியல் என்று உறுதியான கோட்பாடுகள் அறியப்பட்டிருக்கவில்லை. எப்படி நோயைக் கண்டுபிடிப்பது, எப்படி குணப்படுத்துவது தொடர்பாக தரப்படுத்தப்பட்ட முறைகள் இருககவில்லை. மருத்துத்துறை அவ்வளவு சமூக அந்தஸ்தும் பெற்றுருக்கவில்லை. எப்படி இந்தியாவில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கீழ் சாதியாக கருதப்பட்டார்களோ, அதற்கு சற்று மேம்பட்ட நிலை மேற்குநாடுகளில் இருந்தது. குறிப்பாக பலமான துறையாளர்களின் கைகளில் மருத்துவம் அன்று இருக்கவில்லை. 1800 பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது.
 

அன்று பொது மருத்துமாக Allopathic மருத்துவம் மருபியது. அந்த மருத்துவர்கள் ஒரு ஒன்றியம் அமைத்து தங்களது நலனுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Homoepoahts, ecelctics, Chiropractic, Osteopathy, pharmacy, midwifry போன்ற அன்றிருந்த பிற பிரிவினர்களை சிறுமைப்படுத்தினர் அல்லது தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்தார்கள்.
 

1900 களில் மருத்துவ ஒன்றியங்களின் செயற்பாட்டால் மருத்துவக் கல்வி தரப்படுத்தப்படு, மருத்துவம் உரிமம் பெறவேண்டிய பணி என்று சட்டமாகிற்று. தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவம் வேகமாக ஒரு வணிகமாக தன்னை வளர்த்துக்கொண்டது. இதன் பின்னரே மருத்துவம் அறிவியல் முறைப்படி கல்விக்கும் பணிக்கும் முக்கியத்துவம் தந்தது. அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் நோய் பற்றி, நோய்களை கண்டறியும் முறைபற்றி, குணப்படுத்தும் முறை பற்றி பல முன்னேற்றங்களை எட்டியது. மருத்துவத்திம் அறிவியமயமாக்கப்பட்ட பின் பல உட்பிரிவுகள் தோன்றின. எடுத்துக்காட்டாக physiotherpay, occupational therpay, x-tray technology, Nursing, Pharamsy ஆகியவையாம். மேலும், இப்படி வளர்ந்த மருத்துவம் சித்த மருத்துவம், சீன மருத்துவம் போன்றவற்றை பிற அறிவியல் எழுச்சிக்கு முற்பட்ட மருத்துவ முறைகளை பின் தள்ளியது, அல்லது அவற்றை மாற்று மருத்துவங்கள் என்று சிறுமைப்படுத்தியது.
 

1900 களின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வியும் மருத்துவத்துறையும் தனியார் வணிகங்களிடமே இருநத்து. 1950 களின் பின்பு இந்த நிலை கனடாவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் மாறத்தொடங்கியது. தனியாரிடம் இருந்த மருத்துவத்துறை பெரும் தொகை மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்திசெய்யவில்லை. இலாபம் ஈட்டும் நோக்கில் நோய்களை வரும் முன் காப்பதை விட, வந்த பின் குணப்படுத்தும் பண்பைப் பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவ சேவைகளை வழங்க உதவவேண்டும் என்று வேண்டினர். இதன் நீட்சியாக 1960 களில் கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மருத்துவக் கல்வியையும் சேவையும் அரசு முதன்மையகா வழங்க தொடங்கியது. அரசு கட்டுப்பாட்டுக்குள் மருத்துவம் வந்த பின்னர் மருத்துவர்கள் அரச சேவையார்களாக மாறினர்.