Author Topic: கடாய் மஸ்ரூம் மசாலா  (Read 806 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கடாய் மஸ்ரூம் மசாலா
« on: August 08, 2012, 06:36:12 PM »
சைவ உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு மஸ்ரூம் கூட மிகவும் பிடிக்கும். அந்த மஸ்ரூம் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து அவற்றை வராமல் தடுப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய மஸ்ரூமை நன்றாக வாய்க்கு சுவையாக இருக்கும் வகையில் சமைத்து உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த கடாய் மஸ்ரூம் மசாலாவை சமைத்து சாப்பிடலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மஸ்ரூம் - 250 கிராம்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் மஸ்ரூமை நன்கு கழுவி வெட்டிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு, சிறிது உப்பை தூவி, 2 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் அதில் தண்ணீரை ஊற்றி, நறுக்கிய மஸ்ரூமை போட்டு, கிளறி, தீயை குறைவில் வைத்து, மஸ்ரூம் வெந்து, மசாலா சற்று கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

இப்போது சுவையான கடாய் மஸ்ரூம் மசாலா ரெடி!!! இந்த மசாலாவை சப்பாத்தி, சாதம், நூடூல்ஸ் போன்றவற்றோடு சாப்பிடலாம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்