Author Topic: காதலைப் போல நட்பும் இனிக்கும்  (Read 553 times)

Offline Tamil NenjaN

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
உள்ளம் தவிக்கும்
காதலும் நட்பும் மட்டும்தான்
அன்பான உறவாய் தோன்றும்

நட்பு அருகில் இருந்தால்
உலகம் இனிமையாய்தோன்றும்
காதலின் அருகாமையில்
இன்னும் பல பிறவிகள்
வாழத் தோன்றும்

நட்பும் காதலும் இருந்தால்
சந்திப்புகள் இனிக்கும்
இல்லாத தருணங்களில்
காத்திருப்புகளும் வலிக்கும்

ஆயிரம் ஆயிரம் கற்பனைகளை
நட்பின் உள்ளம் சுவாசிக்கும்
கற்பனைகளையே காவியமாக்கி
காதல் உள்ளம்
கவிதை வடிக்கும்

சந்தோசங்களும் சோகங்களும்
கலவையாய் இருக்கும் நட்பில்
சோகங்களும் கூட
சுகமாகிப் போகும் காதலில்

தென்றலின் வருடலாய்
நட்பிருக்கும்
பூவின் வருடலாய்
காதலின் அருகாமை
தேனின் இனிமையாய்
காதலின் மொழிகள் கேட்கும்

பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
சந்திக்காத நாட்களின் இடைவெளியிலும்
நட்பின் மொழி
தெளிவாகக் கேட்கும்
காதலின்  இனிய நினைவுகள்
மனதை தாலாட்டும்