Author Topic: யோக‌ம், கரண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?  (Read 5895 times)

Offline Global Angel

பஞ்சாங்கத்தை எழுதும் போது யோகம், கரணம், அமிர்தாதி என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்களே அதனுடைய அர்த்தங்கள் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இதெல்லாம் முற்றிலும் அறிவியல். பூமியை சூரியன் எந்த அளவிற்கு கடக்கிறதோ அதைப் பொறுத்துதான் இதெல்லாம். சந்திரன் பூமியில் இருந்து எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை அறிவதற்குதான் பிரதமை, திருதியை போன்ற திதிகளெல்லாம். அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் எந்த அளவில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை காட்டக்கூடியதுதான் இது.

இதே மாதிரிதான் யோகங்களும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் பூமி எந்த மாதிரியான அமைப்பில் இருக்கிறது என்பதை காட்டக்கூடியதுதான் யோகம். அதாவது, சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் இந்த மாதிரியெல்லாம் அமைகிறது.

இதெல்லாம் முற்றிலும் வானவியல் கணக்குமுறை (Astronomical Calculation). இதை அடிப்படையாக வைத்துதான் வானவியல் தொடர்பான வார்த்தைகளே (Astrological Terms) நிறைய வருகிறது.

கரணம் என்பது?

யோகம், கரணம் என்பது என்னவென்றால், இதுவும் அதே மாதிரிதான். சந்திரனுக்கும், சூரியனுக்கும் நடுவில் இருக்கக் கூடிய இடைப்பட்ட பகுதி பாதைகளை வைத்துதான் நிஷ்கம்ப யோகம், கரணம் எல்லாம் குறிக்கப்படுகிறது.