Author Topic: தற்போதைய சூழலில் அசுவமேத யாகம் நடத்துவது சாத்தியமா?  (Read 5825 times)

Offline Global Angel

அசுவமேத யாகத்தை தற்போதைய காலகட்டத்தில் செய்ய முடியாது என்றுதான் கூற வேண்டும். அசுவம் என்பதற்கு குதிரை என்று பொருள். குதிரைகளை மையமாக வைத்து செய்யப்படுவதே அசுவமேத யாகம்.

அசுவமேத யாகத்திற்கான ஏற்படுகளை தற்போது மேற்கொள்வது இயலாத காரியம். பாதம் படாத பூமியில் யாக சாலை அமைத்தே அசுவமேத யாகம் நடத்த வேண்டும் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளன. தற்போது அது போன்ற இடம் கிடைப்பது கடினம்.

மேலும், அதர்வண வேதப் பிரகாரம் அந்த யாகத்திற்கான சமித்துகள் தற்போது கிடைப்பது இல்லை. தற்போதைய காலத்திலும் சிலர் அசுவமேத யாகம் செய்வதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உண்மையான அசுவமேத யாகத்தை தற்போதைய சூழலில் நடத்துவது மிக மிகக் கடினமானது.

அசுவமேத யாகத்தை செய்வதற்கு அனைவருமே தகுதியானவர்கள்தான். எனினும், பண்டைய காலத்தில் செய்யப்பட்டது போல் சிறப்பான யாகங்களை தற்போது செய்ய முடியாது என்பதை இங்கே மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.