Author Topic: எண்ணப் பக்கங்கள்  (Read 616 times)

Offline Global Angel

எண்ணப் பக்கங்கள்
« on: July 27, 2012, 05:11:04 PM »
என் எண்ணப் பக்கங்கள்
உன் நினைவுகளால் மட்டுமே
புரட்ட படுகின்றது ...
நீ இல்லாத பொழுதை
என் இதயசுமையை
எனக்காக பாதி சுமக்கும்
என் கவிதை பதிவுகளே
என் கண்ணீரின் சுமைகளை
கண நேரம் தாங்கி கொள்ளுங்கள்
என் காதலன் வரும் நேரம்
என் கண்ணீர்
அவனிடம் என் மேல்
கழிவிரக்கத்தை
ஏற்படுத்திட கூடாது ......