Author Topic: ~ கொய்யாப்பழம் சாப்பிடுங்கோ ~  (Read 935 times)

Offline MysteRy

கொய்யாப்பழம் சாப்பிடுங்கோ



எல்லோருக்கும் எப்போதும் உகந்தது தான் கொய்யாப்பழம் . எல்லோரும் எப்போதும் சாப்பிடலாம் . நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.

உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது. இலங்கை , இந்தியா , இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கும் இந்த கொய்யாப்பழம் . மிகவும் ருசியான பழங்களில் கொய்யாப்பழமும் ஒன்று . சில கொய்யா மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் சிறிய பிஞ்சிலே அதிக ருசி உடனும் , இனிப்பாகவும் இருக்கும் .கொய்யா பழங்களில் எனக்கு யானை கொய்யா தான் பிடிக்கும் . பென்னம் பெரிய கொய்யாவாக இருந்தால் அது யானை கொய்யா எனப்படும் .

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.



கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
 
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. இலைகள் கொய்யா வாசனைகள் தான் வீசும் .


அணில்கள் கூடுதலாக கொய்யா பழங்களை அதிகம் விரும்பி  உண்ணும் . அவற்றுக்கு மிகவும் பிடித்தது கனிந்த கொய்யா பழங்கள் தான் .
 
கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள் .குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.



நீங்களும் கொய்யா பழங்களை விரும்பி உண்ணுங்கள் . அவற்றின் பயன்களை அனுபவியுங்கள் .