Author Topic: உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி – ஆய்வறிக்கை  (Read 1078 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி – ஆய்வறிக்கையில் பகீர் தகவல்




இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிற து. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவ ற்றை சாப்பிடும் பழக்க ம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதி கரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனா ல், “மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காரா பூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது’ என, “கன்சியூமர்ஸ் அசோசி யேஷன் ஆப் இந்தியா’ எனும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பு வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
 
இதுகுறித்து, இந்த அமைப்பின் பொதுச் செயலர் ராஜன் கூறியதாவது:ஒரு நாளைக்கு, நாம் உண்ணும், 100 கிராம் அளவுள்ள உணவில், 20 கிராம் வரை, கொழுப்புச் சத்து இருக்கலாம் என, உணவு ஆலோ சகர்கள் கூறுகின்றனர். நம் பராம்பரிய இனிப்பு, கார வகைக ளில், கொழுப்புச் சத்து எவ்வளவு உள்ளது என்பதை அறிய, சென் னை நகரின் பல் வேறு பகுதிகளி ல் உள்ள, “ஸ்வீட் ஸ்டால்’களில் விற்கப்படும் குறிப்பிட்ட இனிப்பு, கார வகைகளை ஆய்வுக்கு உட் படுத்தினோம் . இவற்றில் பெரும் பாலான தின்பண்டங்களில், அளவுக்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது, ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, பராம்பரிய இனிப்பு, கார வகைகளையு ம், நாம் அளவோடு உண்ண வேண்டும். இல்லையெனில், உடல் பரு மன், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் சேர்க்கப்ப டும் எண்ணெய், நெய் மற்றும் கார்போ ஹைட்ரேட் சம்பந்தப்பட்ட மாவுகள், இந்த அபாயத்தை அதிகரிக்கின்றன. இவ்வாறு ராஜன் கூறி னார்