Author Topic: ~ ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!! ~  (Read 892 times)

Offline MysteRy

ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!!



கீரை உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறையாவது ஒரு கீரை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும் இந்த கீரை வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். இந்த கீரையை எவ்வாறு சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 2 கட்டு
வெங்காயம் - 2
பட்டாணி - 1/2 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
கொத்தமல்லி - 1/2 கட்டு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 3
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கீரை மற்றும் தக்காளியை நன்கு சிறிது சிறிதாக நறுக்கிக்
கொள்ளவும்.

பின் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீரை விட்டு, பட்டாணியை போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கவும். பின் அதில் அரைத்த கலவையை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
பின் அதில் மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய கீரையை அத்துடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து நன்றாக வேகும் வரை வேக விடவும்.

கீரையானது நன்கு வெந்தவுடன் அதனை இறக்கி வைக்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான கீரை சப்ஜி ரெடி!!!
இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.