Author Topic: உளுந்தம்பருப்பு சாதம்  (Read 551 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

தேவையான பொருட்கள்:

அரிசி 2 டம்ப்ளர்,
உளுந்து 1/2 டம்ப்ளர்
தேங்காய் துருவல் 1 மூடி
பூண்டு 8 அல்லது 10
கருப்பு எள் 50கிராம்
மிளகாய்வற்றல் 7
புளி சிறிது
உப்பு தேவையன அளவு

உளுந்தம் பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து 7டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் தேங்காய் துருவல் பூண்டு தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.

சாதம் தயாராவதற்குள் எள்சட்னி அரைக்கலாமா?

எள்ளை சுத்தம் செய்து நன்றாக வறுதுக்கொள்ளவும்.

மிளகாய் வற்றலையும் வறுத்துக்கொண்டு புளி உப்பு சேர்த்து துவையல் அரத்துக்கொள்ளவும்.

உளுந்தம்பருப்பு சாதம் தயார்.

இந்தசாதத்துடன் நல்லெண்ணை ஊற்றி எள் துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கு மாதம் இரு முறை செய்து தரலாம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்