Author Topic: ஆரோக்கியமான உடலுக்கு நெல்லிக்காய் சாப்பிடுங்க...  (Read 682 times)

Offline kanmani

நெல்லிக்காயின் நன்மைகள்:

* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

* உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

* இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

* செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

* உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

* கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

* இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

* நெல்லிக்காய் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காயை தவிர வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்:

* அனைத்து விதமான பச்சைக் காய்கறிகள், கீரைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

* குடைமிளகாயின் வகைகள் அனைத்திலுமே வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

* பழங்களில் மாம்பழம், அன்னாசி பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி பழங்கள் மற்றும் பப்பாளியில் அடங்கியுள்ளன.

* காய்கறிகளில் காலிஃப்ளவர், பிராக்கோலி, சிவப்பு முட்டைகோஸ் போன்றவற்றில் உள்ளன.

* மூலிகைகளில் பேசில், புதினா, கொத்தமல்லி, ரோஸ்மேரி போன்ற அனைத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளன.

ஆகவே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க நெல்லிக்காயுடன், மேற்கூறிய சில உணவுப் பொருட்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.