நம்முடய ஸ்திர நிலையை மூளை உணர்வதற்கு நான்கு சிக்னல்கள் தேவை.
1. காதுகளின் உள்பகுதியில் உள்ள திரவம், முப்பரிமான சமநிலையை அறிவிக்கிறது.
2. கண்கள், சுற்றுப்புறத்துக்கும் நமக்கும் உள்ள அசைவு வேறுபாடுகளை உணர்த்துகின்றன.
3. காலிலும் உட்காரும் இடத்திலும் உள்ள அழுத்தம் மூலம் புவிஈர்ப்புவிசை நம் உடலை எப்படி பாதிக்கிறது, எது மேல், எது கீழ் என்பதை உணர்கிறோம்.
4. தசைகளுடன் இணைந்த நரம்புகள், செய்திகள் உடலின் எந்தப் பகுதிக்கு நகர்கிறது என்பதை அறிவிக்கிறது.
இந்த நான்கு செய்திகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், குமட்டல் வரும். குறிப்பாக, பிரயாணத்தின்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கண்கள் நகர்வதை கவனிப்பதில்லை. காதுகள் நகர்தலை உணரும்போது, விளைவு சுழட்டல் குமட்டல்! இது அதிகமாக இருந்தால் மருத்துவரை ஆலோசித்து ஆவோமின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி: குமுதம்