Author Topic: உப்பு துளி  (Read 502 times)

Offline Global Angel

உப்பு துளி
« on: June 19, 2012, 12:47:28 PM »
உன்னிடம் பேசிவிட துடிகின்றேன்
இருந்தும்
என் கண்ணீர் துளிகளே
என் மனதுள்ளே
நான் பூட்டி வைத்ததை
 காட்டி கொடுத்துவிடும்

என் கண்ணீர் கூட
என்னிடம்
இரக்கம் காட்ட மறுக்கிறது
உன்னைப்போல் ..
அதுவும் என்னை
உதாசீன படுத்துகின்றது ...

என் உப்பு துளிகளை
ஒரு முறை சுவைத்துவிடு
என் கண்ணீர் துளிகளும்
மோட்சம் பெறும்