Author Topic: சிறகொடிந்த பறவை...  (Read 2073 times)

Offline JS

சிறகொடிந்த பறவை...
« on: August 01, 2011, 02:57:55 PM »

சிரிப்பொலியில் என் வாழ்க்கை
என்றும் சீறி ஓடும் பொன் வண்ணங்கள்
இளம் வண்டுகள் தேடும் வானவில்லாய்...
ஒளி வீசும் நிலவாய் இருந்த நான்
இன்று. . . . .
சிறகொடிந்த பறவை ஆனேன்
செந்தூரமே சிக்கலானது...
சோகமே நாட்டியமாடுதே!
சொந்த வாசலில்...
சொல்ல முடியாத வேதனை!
என்ன செய்வேன் நான்
வானத்தை தலை நிமிர்ந்து பார்த்தேன்
எட்டி உதைத்தது...
ஒளியை கடன் கேட்டேன்
இருளாகி போனது
ஏன் இந்த வலி...
இதயம் துண்டாகி போனதோ !!
என்னுடையவன் என்று நினைத்தது
பொய்யாகி போனதோ !!!...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: சிறகொடிந்த பறவை...
« Reply #1 on: August 01, 2011, 03:38:21 PM »
இருளாகி போனது
ஏன் இந்த வலி...
இதயம் துண்டாகி போனதோ !!
என்னுடையவன் என்று நினைத்தது
பொய்யாகி போனதோ !!!...

manathai thotta varigal... nice kavithai .... js ;)