நிலவும்
நள்ளிரவில்
சோகம் மறைத்து
மனதின் வலிகளை
ஸ்ருதியோடு இசை மீட்க
என்னவளே
உன் செவிகளுக்கு எட்டாதோ
உன்னவன் படும் பாடு...
உன்னோடு கைகோர்த்து
காதல் இசை மீட்ட வேண்டிய
கரங்கள்
இன்று தனிமையில்
வேதனையோடு தவிக்க
என் வேதனை தாளாமல்
காரிருள் மேகம்
தன காதலி நிலவினை
கட்டித்தழுவ செல்கிறதோ..
சீரும் கடல் அலையும்
சலனமில்லாமல்
மௌனம் காக்க
என்னவளே மௌனம் காக்காமல்
வந்துவிடு உன்னவ்னை சேர
உன் முகம் பார்த்தே
மலர்ந்த என் முகம்
இன்று நிலம் பார்த்து
கண்ணீர் சிந்த
கண்ணீரை அறியாமல்
கலக்கம் புரியாமல்
கல்லாகி போனாயோ..
தவழும் முத்தத்தை
காற்றோடு தருகையில்
தழுவ அருகில் இல்லை நீ
என்றாயே
இந்து என் முத்தத்தையும்
வேதனைகளையும்
மனதை வருடும் இசையில்
இதயத்தி துடிப்போடு
அனுப்பிவைக்கிறேன்
உன்னை வந்து சேர..
வேதனைக்கு மருந்தாக
காற்றோடு தவழும்
முத்தத்தை எனக்காக
திருப்பி அனுப்பி விடு..
நாம் சேரும் நாள் வருகையில்
மொத்தத்தையும்
மறக்காமல் தருகிறேன்
என்னவளே
உனக்கே உனக்காக..
இந்த கவிதை நான் படித்த கவிதைகளில் பிடித்தமான ஒன்று..நான் எழுதிய கவிதை அல்ல.