தேடல் நிறைந்த உலகில்
தேடாமல் கிடைத்த சொந்தம் நீ
தேடி பார்கிறேன்
உன் போல் ஒரு சொந்தம்
எங்கும் இல்லை...
தேவை அறியா பொழுதிலும்
தேவையான பாசத்தை தருபவன் நீ..
குழப்பமான நேரத்தில்
தெளிவை தரும் தோழனாய்..
குழந்தையாக ஏங்கும் நேரத்தில்
பாசத்தை தரும் அன்னையாய்
ஊடல் பொழுதினில்
உள்ளம் கவரும் கள்வனாய்
எல்லாமும் நீ...