ஏளனம் செய்திடும் சலனமே துளியும் தெரியாதபடி
எக்காளமாய், எகத்தாளமாய் ஒருதகவல்
அனுப்பியவர் யார் என்றால், எதிர் மன்ற புதிர் நண்பர்.
என்ன "கவிச்சக்ரவர்த்தி" உங்கள் மன்றத்தில் (FTC )
கடும்(கவிதை) வறட்சியாமே ?? கேள்விபட்டேன் என
கேலி பேசுவாதாய் ஒரு கேள்வி கேட்டிருந்தார் .
படித்ததும் துடித்திருக்கவேண்டும்,துடிக்கவில்லை, ஏன்??,
துடிப்பதை போல நடிக்கவும் இல்லை, ஏன் ??
கேட்ட கேள்வியில் கேலி இருந்த அளவு, உண்மையில்
கொஞ்சம் உண்மையும் இருந்தது, அதனால் ...
ஒப்ப மறுப்போர் நம் மன்ற புள்ளி விவர வரலாறு
(இம்மாதத்தின் ) விவரம் சரி பார்க்கலாம் !
கேள்வியின் உண்மை நினைத்து முகம் சுழித்து நின்றேன்
என்ன பதில் உரைப்பது என தெரியாமல்,புரியாமல்
விழித்து நின்றேன் ,
என்ன இருந்தும் , என் மன்றம் என் மக்கள் ஆயிற்றே !
அதே புள்ளிவிவர (கடந்தமாத) விவரம் துணை கொண்டு
எங்கள் கவிமேகங்கள் அபரிமிதமான கவிதை மழை
பொழிந்துவிட்டமையால் தற்காலிக சிறு ஓய்வில் உள்ளனர்
என ஒரு வழியாய் சமாளித்துவிட்டேன் தற்காலிகமாய் .
ஓ கவி மேகங்களே ! எங்கே போனீர்கள் ??