சித்திரை மாத கத்திரி வெயிலால்
விட்டு விட்டு வெட்டுப்படும் மின்வெட்டினால்
கொள்ளை பொழுது கத்திரிக்கபடும் மின்சாரத்தின்
தொல்லை ஏதும் இல்லாமல் அதிசயமாய்
பத்தரை மணிக்கெல்லாம் நித்திரைக்குள் ஆழ்ந்துவிட்டேன்
நடு நித்திரையில் எனக்கும் ஒரு கனவு விசித்திரமாய் ...
கனவில் தோன்றிய கணவான்கள்
யார் யார் என
கண்துடைத்து பார்த்து ஊர்ஜிதம் செய்துவிட்டேன்
பெண்ணியம் போற்றி தழைக்க பாடுபட்டு பொன்மொழிகள்
பல பொன்மழைகளாய் பொழிந்த பெரியோர்கள் அவர்கள்
பெயர் பட்டியல் படிக்கின்றேன் பாருங்கள் பொன்னானவரே!
பாரதி ,பெரியார்,திரு வி.க ,கடைச்யில் அவ்வையார் !
அவர்களுள் பாரதியை மட்டும் நான்
ஒரு சில கேள்விகள் கேட்க விரும்பினேன் .
ஒருவழியாய் கேட்டும் கேட்டுவிட்டேன் ..
இதோ கேள்விகள் ...முதலில் பாரதியிடம்
முண்டாசு கவியே !உன் தலைக்கு அந்த முண்டாசு
வந்ததன் ,வரலாறு உரைக்க முடியுமா ??
வெட்கத்துடன் தயங்கி தயங்கி விளக்கம் சொல்ல
விழந்தே விட்டான் பாரதி ...
பெண்ணியத்திர்க்காக பெருவாரியான வரிகள்
வரைந்து தான் விட்டோமோ என வெட்கி வருந்துவதாய்
விளக்கம்தனை வழங்கினான் ...
அதிர்ச்சியுடன் கலந்த உணர்வின் வெளிபாட்டை வெளிபடுத்தி
இன்னும் விஷயத்திற்கே வரவில்லையே என வெளிப்படையாய்
வெளிபடுத்தியேவிட்டேன்...
பெண்மைக்கென பெண்ணியம் போற்றி பெரும்பாடுபட்டு
பெண்களுக்கு பெற்று தந்த சுதந்திரத்தை மதியாது
உளறிகொட்டுவதும்,உளறலின் உச்சபட்சமாய் ..
இதிகாசங்களை இழிவுசெய்வதும் ,இதிகாச நாயகர்களை
இழிவின் எல்லைக்கே இட்டுசெல்வதும் என
இத்தாதி இத்தாதிகளை அரங்கேற்றி இருகின்றனர் .
அவர்தம் இந்த நடவடிக்கையை கண்டு இன்முகம் கொண்டு
என்னை போற்றியோரெல்லாம் இன்று தூற்றுகின்றனர்
என் காதுபடவே !ஆதலால் தான் இந்த ஏற்பாடு என்று முடித்தான் .