Author Topic: பூவா தலையா  (Read 2364 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
பூவா தலையா
« on: July 31, 2011, 08:16:46 PM »
வெற்றி தோல்வியும்
நாணயத்தின் இரண்டு
பக்கங்கள், இந்த நாணயம்
ஒவ்வொரு நாளும்
சுண்டவும் படுகிறது
சுழலவும் செய்கிறது
ஆனால் யார் சுண்டுகிறார்கள்
யார் கேட்கிறார்கள் தலை பூ
என்பதை அறிய முடிவதில்லை
மனிதனாலும் மனத்தாலும்
இந்த சக்தியைதான் ஆத்திகன்
கடவுள் என்கிறானோ???
சுழண்டு கொண்டேதான் இருக்கிறது
எப்போதுமே நாணயம் வாழ்க்கையின்
சுழற்சியில் நீ உன்னை உற்று நோக்கி
தயார்படுத்தும் போது வெற்றி பக்கம்
உன்னை தரிசிக்கிறது....
வெற்றி களிப்பில் இருக்கும் போதும்
நாணயம் சுழன்று கொண்டேதான்
இருக்கிறது.. வெற்றி வந்ததும்
மனிதன் ஏனோ சுழற்சியை
மறந்துவிடுகிறான் ....
மீண்டும் அடுத்த முறை அடுத்த
பக்கம் வரும் போது வெற்றியை
ஏற்றுக்கொள்வது போல தோல்வியை
ஏற்க ஏனோ மனிதனும் மனசும்
விரும்புவதில்லை!!!

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பூவா தலையா
« Reply #1 on: July 31, 2011, 08:38:21 PM »
unmaithan nalla kavithai:)