மௌனத்திற்கும்,
வார்த்தைக்கும்
இடைப்பட்டிருக்கிறது
யோசனை
~
எத்தனை பேர் இசைத்தும்
தீர்ந்து போகவில்லை
இசை
~
முதிர்ந்து உதிரும்
இலைகளில்
படிந்து கிடக்கிறது
ஒரு பாடம்
--
கோபத்தில்
உமிழ்ந்திடத் தோணுது
கோபத்தையே
உமிழ்ந்து விட்டால்...
~
மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை