மூன்று நாட்களாய் தொடர் வேலை பளு
பகல் முழுதும் அலுவலக அலுவல்
இர்ரவுகளில் நள்ளிரவு வரை தொடர் பயணம் .
இருந்தும் பகலில் தோன்றும் அலுப்பு சலிப்பு
துளி கூட இல்லை இரவுகளில்
ஆச்சரியத்திற்கான ரகசியம் தேடி
ரகசியமாய்,பகிரங்கமாய் முயற்சி
தளர்வில்லா தொடர்முயர்ச்சியால் சற்று முன்னர்
ரகசியம் அறிந்தேன் ......
மூன்று நாட்களாய் வானில் முழு மதி
தொடர்ந்து தினமும் தொடர்பில் இருப்பவரே
என்னை கொடுமையாய் கொடுமை செய்யும்பொழுது
இதுவரை தொடர்பே கொள்ளாது ,
தொலை தூரம் இருக்கும் நீ
என்னை அகம்,மனம் குளிர்விப்பது
எப்படி சாத்தியம் ??!