Author Topic: பேபி கார்ன் பொரியல்  (Read 1027 times)

Offline kanmani

பேபி கார்ன் பொரியல்
« on: May 29, 2012, 05:02:00 PM »


    பேபி கார்ன் - 4
    பெரிய வெங்காயம் - ஒன்று
    மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    தாளிக்க:
    கடுகு
    உளுத்தம்பருப்பு
    கறிவேப்பிலை
    எண்ணெய்

பேபிகார்னை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

பின் நறுக்கிய பேபிகார்ன், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் கலவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். கார்ன் நன்றாக வெந்ததும் இறக்கி விடவும்.

சுவையான பேபி கார்ன் பொரியல் ரெடி. சாம்பார் சாதத்திற்கு சரியான ஜோடி.