விழி
இளைஞனே
விழி ...!
இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...!
மனதில்
லட்சிய விதைகளை
விதை ...!
கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி ...!
உன்
உழைப்பின்
வியர்வைகள்
உரமாகட்டும் ...!
விழிகளின்
வழியே
வெளிச்சத்தை செலுத்து ...!
விழி
இளைஞனே
விழி ...!
நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...!
வெற்றிகளை
கனவுகான்
வாழ்க்கை வசந்தமாகும்...!
வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ...!