தோசை மாவு - இரண்டு கரண்டி
மீதியான உருளைக்கிழங்கு பூரி மசால் - 2 கரண்டி
எண்ணெய் - 2டீஸ்பூன்
தோசை மாவையும்,உருளைக்கிழங்கு மசாலையும் கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை சூடு செய்து சிறிது எண்ணெய் தடவி கலந்த மாவை வட்டமாக பரத்தி விடவும்,மூடி போடவும்.
தோசை வெந்து வரவும் சிறிது எண்ணெய் தெளித்து திருப்பி போட்டு வெந்து வரவும் எடுக்கவும்.
சுவையான முறு முறுப்பான கலந்த மசால் தோசை ரெடி.சாம்பார் சட்னியுடன் பரிமாற சூப்பர்.இரண்டு தோசை சாப்பிட்டால் போதும் வயிறு ஃபுல்.
Note:
இது போல் பொரியல்,கிரேவி,குருமா,கொத்துக்கறி எது மீதமானாலும் கலந்து சுடலாம்.