Author Topic: பக்கோடா வகைகள்  (Read 1796 times)

Offline kanmani

பக்கோடா வகைகள்
« on: April 30, 2012, 09:43:23 AM »
முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு - 100 கிராம்
கடலை மாவு - 1 கோப்பை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கடலை மாவில் சிறிது தண்ணீர் தெளித்து முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் பிசறவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், பிசறிய முந்திரிப்பருப்பு கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு

1. அடுப்பை மிதமான தீயில் எரியவிடவேண்டும். இல்லையெனில் முந்திரிப்பருப்பு கருகிவிடும்.

Offline kanmani

Re: பக்கோடா வகைகள்
« Reply #1 on: April 30, 2012, 09:45:15 AM »
வெங்காய பக்கோடா

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும்.

3. ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவும்.

4. தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

5. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும். 6. மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும்.

குறிப்பு

1. வெங்காயம் முடிந்தவரை பெரிதாக இருக்க வேண்டும்.

Offline kanmani

Re: பக்கோடா வகைகள்
« Reply #2 on: April 30, 2012, 09:47:33 AM »
வாழைப்பூ பக்கோடா

தேவையான பொருட்கள்

வாழைப்பூ - 1
பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 2 கோப்பை
மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

2. அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.

4. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

குறிப்பு

1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.

2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.

Offline kanmani

Re: பக்கோடா வகைகள்
« Reply #3 on: April 30, 2012, 09:50:49 AM »
நிலக்கடலை பக்கோடா

தேவையான பொருட்கள்

நிலக்கடலை (வறுக்காதது) - 200 கிராம்
கடலை மாவு - 1 1/2 கோப்பை
அரிசி மாவு - 1/4 கோப்பை
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2. கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் பிசறவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், பிசறிய நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.