Author Topic: ~ இஞ்சியின் மகத்துவம்... ~  (Read 1162 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226320
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இஞ்சியின் மகத்துவம்...




இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.

இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.