📱கைபேசி
கைபேசி வந்த நாள்முதல்
கதை எல்லாம் தலைகீழ் ஆனதே !
காலை எழுந்தவுடன்
அம்மாவை பார்க்காமல்,
முதலில் பார்ப்பது
கைபேசி தான் !
அலாரம் அடித்தால் கோபம் !
ஆனால் அழைப்பு வந்தால் ஆனந்தம் !
சாப்பிடும் நேரத்தில் செல்பி
நடக்கும் நேரத்தில் ரீல்ஸ்
படிக்கும் நேரத்திலும்
"இன்னும் ஐந்து நிமிடம்"
என்பதே வழக்கம் !
சார்ஜ் குறைந்துவிட்டால்
முகமும் வாடிவிடும் !
wifi இல்லையென்றால் உலகமே
நின்றுபோனது போல தோன்றும் !
உரையாடல் எல்லாம்
திரையில்தான் நடக்கிறது
நண்பர்கள் அருகில் இருந்தாலும் !
பாட்டி கதை சொல்ல வந்தால்
"ஒரு நிமிடம்" என்று சொல்லி
வீடியோ பார்க்கிறோம் !
ஆனால் கைபேசியும்
ஒரு நல்ல நண்பன்தான் !
பாடம் படிக்க , புதிய விஷயங்களை கற்க,
தூரத்தில் உள்ள உறவினர்களை
அருகில் இருப்பது போல
பேச வைக்கிறது கைபேசி !
கைப்பேசியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் அது நம் நண்பன் ! அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால்
அது நேரத்தைத் திருடும் குறும்புக்காரன் !
சிரிப்பும், சிந்தனையும் தரும்
இந்தச் சிறிய கைபேசி !
நம் வாழ்க்கையை எளிதாக்கட்டும் !
ஆனால் நம் நேரத்தையும் ,
நம் உறவுகளையும் திருடாமல் இருக்க,
அதை அளவோடு பயன்படுத்துவோம்!