Author Topic: மெய்நிகர் நட்பு  (Read 840 times)

Offline Luminous

  • Jr. Member
  • *
  • Posts: 52
  • Total likes: 329
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மெய்நிகர் நட்பு
« on: April 04, 2026, 09:52:35 PM »
சமூக வலைதளத்தில் மலரும் நட்பு,
மெய்யா… மாயையா…?

திரையில் தோன்றும் சிரிப்புகள் எல்லாம்,
மனதில் பதியும் உண்மையா…?

ஒருவர் வார்த்தை காயப்படுத்தினால்,
மற்றொருவர் மௌனமாக தாங்கணுமா…?
அல்லது காயத்தின் குரலை வெளிப்படுத்தணுமா…?

மௌனம் காத்தால் நட்பு நீளுமா,
உண்மை சொன்னால் நட்பு வலுப்பெறுமா?

பொய்யான பாசம் போல் நிழல் வேண்டாம்,
உண்மையான உணர்வு தான் நிலைத்து நிற்கும்…

காயம் சொல்லும் நெஞ்சம் இருந்தால் தான்,
அது உண்மையான நட்பு என்று அர்த்தம்…

மெய்நிகராயினும், மனம் உண்மையாயிருந்தால்,
அந்த நட்பு காலத்தையும் கடக்கும்🤔🤔🤔🤔🤔🤔🐒