Author Topic: புத்தாண்டு ஏக்கம்🥹  (Read 5 times)

Offline Ramesh GR

  • Newbie
  • *
  • Posts: 8
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
வண்ணங்கள் பலவிதம் எண்ணங்களை பலவிதம் தோன்றி மறைந்தன 🤔

செல்வமும் வறுமையும் மாறி மாறி விளையாடின 🤑

இன்பமும் துன்பமும் மனதில் பதிந்தன 😄

அன்பும் காதலும் இதயத்தில் பூத்து உதிர்ந்தன😍

கண்ணிரும் வேதனையும் வந்த தடத்தை பதித்தன 🥹

நாட்கள் சென்றது காற்றின் வேகத்தில்
வாரங்கள் சென்றது வந்த வேகத்தில்
மாதங்கள் கடந்தது கண் இமைக்கும் வேகத்தில்
12 முறை கண் இமைத்தேன் வருடம் முடிந்தது 😂

கடந்த பாதையை திரும்பி பார்த்தேன் முட்களும் கற்களும் நிறைந்த கரடு முரடான பாதை இதையே கடந்து விட்டோம் என்ற அசட்டு நம்பிக்கையில் இனியாவது நல்லது நடக்கும் என்ற ஆசையில் ஆவலோடு உன்னை உற்று நோக்கும் ஒரு மானிட மடமை🥹

உனக்கு முன் பிறந்தவனை போல் இல்லாமல் நீயாவது நன்மை மட்டும் செய்வாய் என்று ஆர தழுவி வரவேற்கிறோம் 2026🥳

அன்பு சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🎉❤️❤️

« Last Edit: Today at 12:15:40 AM by Ramesh GR »