Author Topic: மனம் பிறழ்ந்தவளின் குரல்  (Read 501 times)

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 500
  • Total likes: 1288
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u

ஒரு கூட்டத்தில்,
ஒரு அவசரத்தில்,
ஒரு போக்குவரத்து நெரிசலில்,
குழலறலாக வெளிப்படும்
ஓர் மனம்பிறழ்ந்தவளின் குரல்
தலை திரும்பாமலேயே
அலட்சியப்படுத்தப்படுக்கிறது.
'ம்மா, ம்மா' என கையேந்துபவரின்
மன்றாடும் முகம்
 உதாசீனப்படுத்தப்படுகிறது
 ஒரு கையசைவில்.
அறுத்தெரியப்பட்ட ஆட்டின் கண்கள் மிக மிக வசதியாக
புறக்கணிக்கப்படுகிறது.
விரல் பிடித்து
'இத வாங்கிக்கோங்க க்கா'
என கண்களால் இறைஞ்சும்
சிறு பிள்ளைகளின் விரல்கள்
உதறப்படுக்கின்றது.
கடவுளின் காணிக்கை தட்டுகளில்
எண்ணி எண்ணி
சில்லறைகளை இட்டு நிரப்பி
புண்ணியம் தேடிக் கொள்வேன் நான்!
« Last Edit: December 28, 2025, 09:01:48 PM by Ninja »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1273
  • Total likes: 4369
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: மனம் பிறழ்ந்தவளின் குரல்
« Reply #1 on: December 29, 2025, 01:04:54 PM »
வாகனத்தில் செல்ல 
வழியில்
சிகப்பு விளக்கு ஒளிர நின்ற போது
கை நீட்டிய பிஞ்சு குழந்தையிடம்
இல்லை என்ற போது
நானும் பிச்சைக்காரனாய் உணர்ந்தேன்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "