சமீப காலச் சாட்டில்
எதிர்பாராமல் வந்த ஓர் அறிமுகம்,
பெயர் அறியாதபோதும்
பாசம் மட்டும் தெளிவாகப் புரிந்தது.
நான் இடும் ஒவ்வொரு கவிதையிலும்
“நல்லா இருக்கு” என்ற
ஒரு வரிப் பாராட்டு,
என் எழுத்துக்குள்
புதிய உயிர் ஊட்டியது.
நிகழ்ச்சியில் ஒலிக்காத
என் எண்ணங்களின் வலியை
கவிதையாய் மாற்றி பதிந்தபோது,
அதையும் வாசித்து நீ சொன்ன
ஆறுதலான வார்த்தைகள்
“அழகும் அர்த்தமும் கொண்ட
கவிதைகள்
நேரம் எடுத்தாலும்
மனங்களில் தங்கும்.”
யாரோ நீ…
எவளோ நீ…
ஆனாலும்
என் எழுத்தின் மீது
தனி அக்கறையுடன்
அன்பையும் நம்பிக்கையையும்
வைத்த ஒரு மனம்.
நிஞ்ஜா சகோதரி,
இந்தக் கவிதை
உன் அன்புக்கான
ஒரு சிறு நன்றி.
உன் ஊக்க வார்த்தைகளில்
பல புதிய படைப்புகள் பிறக்கின்றன,
அந்த வரிசையில்
நானும் ஒருத்தி என்று
பெருமையுடன் சொல்ல வைக்கும்
உன்னுடைய பேரன்பு.
இப்படிப் பேச
ஒரு பெரிய மனம் வேண்டும் சகோதரி,
அந்த மனத்தில்
பிறரை உயர்த்தும்
மௌனமான மகத்துவம் நிறைந்தது.
என் மனத்தில் நீ
இமயத்தைப் போல
உயர்ந்து நிற்கிறாய்
அமைதியாய்,
உறுதியாய்,
எழுத்தை நேசிக்கும்
ஒரு உயர்ந்த உள்ளமாக.
LUMINOUS 💚💛🧡💜🙏😇