Author Topic: அம்பேத்கர் நினைவு நாள் !  (Read 154 times)

Offline சாக்ரடீஸ்

அம்பேத்கர் நினைவு நாள் !
« on: December 06, 2025, 12:03:30 PM »


தொட்டவுடன் தீட்டென்று
தீண்டாமை சொன்னவர்கள் முன்னே 
தலை நிமிர்ந்து நின்று
புத்தியைத் தீட்டியவர். 

கல்வியால் கண்களைத்
திறந்து வைத்தார் 
அதிகாரத்தால் அடிமைச்
சங்கிலியை உடைத்தார். 

“என் உரிமை என் கையில்” என்று
உரத்துச் சொன்னார்.
மானிடனுக்கு மானம்
தந்த மகான் அம்பேத்கர். 

அவர் தந்த பாதையில்
நடக்கிறோம் இன்று
அவரொரு நட்சத்திரம்
நாமோ அவரது வெளிச்சம்.

அம்பேத்கர் நினைவு நாளில்
அவர் பெற்ற உரிமையைப் பயன்படுத்துவோம்
அவர் கனவு கண்ட சமத்துவத்தை வாழ்வோம்

ஜெய் பீம் !

Offline Vethanisha

Re: அம்பேத்கர் நினைவு நாள் !
« Reply #1 on: December 13, 2025, 04:59:28 PM »
நாம் சொல்வது பிறரைச் சேர வேண்டும் எனில் எனில் அதற்கான அறிவையும் இடத்தையும் நாம் அடைய வேண்டும் என்று உணர்த்தியவர் ! உலகம் வியக்கும் கல்வியாளன் ..  Jai beem !

Super poem mappie 🤩

Offline அனோத்

Re: அம்பேத்கர் நினைவு நாள் !
« Reply #2 on: December 13, 2025, 08:07:17 PM »
கவியின் வரிகளில் கூர்மையும் ஆழமும்
தெளிவாகப் புலப்படுகிறது,

அண்ணா