கவிதைகள் எழுத ஏதும் விஷேஷ
வித்தை எதுவும் கற்க்கவில்லை நான் ,
ஏதோ எனக்கு தோன்றும் கருத்தை தான்
எனக்கு தெரிந்த வார்த்தைகளின் வழியே
வெளிபடுத்துகிறேன் !
என் வரிகளில் எதை கண்டோ, எதில் ஈர்க்கபட்டோ ?
என் மனதை கவர்ந்த தமிழை விட, துளி கூட
நெருக்கத்தில் தூரம் இல்லாத மனம் நெருங்கியவர்
என்ன எண்ணி எத்தநித்தாரோ ??
என்னிடம் என் வரிகளில், வார்த்தைகளில்
வர்ணனையில் காதல் கடிதம் ஒன்று
வரைந்து தர முடியுமா என வினவினாள் !
மூச்சரைத்து போய்விட்டேன் !
முடியுமோ? முடியாதோ? முடிவாய்
முடிவு தெரியவில்லை ,இருந்தும்
முயன்று தான் பார்ப்போமே ?
மரியாதைக்குரிய கோரிக்கைகாக .
காதல் அஞ்சல்
வெகு விரைவில் ............