Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
சூறாவளி பற்றி தெரிந்து கொள்வோம்....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சூறாவளி பற்றி தெரிந்து கொள்வோம்.... (Read 303 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226271
Total likes: 28733
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
சூறாவளி பற்றி தெரிந்து கொள்வோம்....
«
on:
November 05, 2025, 08:27:04 AM »
சூறாவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூறாவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூறாவளியில் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வளைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.
#சூறாவளியின் வேகம்:
பல்வேறு சூறாவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது. சூறாவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300மைல்களாக இருந்தால் இந்த சூறாவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள் தான் சூறாவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
சூறாவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது?
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.
இந்த சூறாவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.
இந்த சூறாவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக் கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
இந்த சூறாவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்.
⤵️
சூறாவளியின் வகைகள் பார்ப்போம்...
இந்த வகை சூறாவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூறாவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூறாவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
#LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)
நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூறாவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.
#GUSTNADO:
இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூறாவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.
#WATERSPOUT:
வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூறாவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூறாவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூறாவளிகளின் வடிவமேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான். இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.
#DUST DEVILS:
இந்த வகை சூறாவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூறாவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில்
மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூறாவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
#FIREWHIRLS:
நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூறாவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூறாவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின்Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெறும் 15நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும்10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
சூறாவளி பற்றி தெரிந்து கொள்வோம்....