Author Topic: ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியக் கூடாது ஏன்...?  (Read 27 times)

Offline MysteRy


ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து காலையில் குளித்தவுடன் அணியலாம். மாதவிடாய் காலங்களில் ருத்ராட்சத்தை தொடுவதோ அணிவதோ கூடாது.

ருத்ராட்சத்தை மாலையாக அணிபவர்கள் 54 எண்ணிக்கை கொண்டதாகவும், 108 எண்ணிக்கை கொண்டதாகவும் அணிய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சம் யார் எந்த இடத்தில் அணியலாம் என்று அவர்களின் ஜனன ஜாதகத்தை வைத்து தான் கூற முடியும். ஜெபம் செய்யும் ருத்ராட்ச மாலைகளை கழுத்தில் அணிய கூடாது.