Author Topic: பல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்றது?  (Read 23 times)

Offline MysteRy


நீண்ட பயணத்தின் முன் ஒட்டக ஓட்டி அதற்கு அதிகப்படியான உப்பைக் கொடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கச் செய்கின்றார். சுமார் 75 தொடக்கம் 80 லீட்டர் வரை குடிக்கும்...

ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளது..

முதல் வயிற்றில் உணவைச் சேர்த்து வைத்துக் கொள்கிறது. இரண்டாவது வயிற்றில் ஜீரணத்துக்கு உண்டான திரவங்கள சுரக்கின்றது. மூன்றாவது வயிற்றில் அசை போட்ட பண்டங்கள் ஜீரணமாகின்றது.

முதல் இரண்டு வயிறுகளின் சுவர்களில் பை பையாக நிறைய வைத்துக் கொண்டிருக்கின்றது. அதில் தண்ணீரைச் சேர்த்து வைத்துக்கொள்ளும். இந்தப் பைகளில் தண்ணீர் நிறைந்ததும் தசைகள் மூடிவிடும். தண்ணீற் தேவைப்படும் போது அது திறந்து சுரக்கும். ஒரு ஒட்டகம் மெல்ல, மெல்ல அதிக பாரம் ஏற்றாமல் சென்றால் பத்து நாட்களுக்கு கூட தண்ணீர் இல்லாமல் இருக்கும். சில சமயம் பாலைவனங்களில் தாகம் தாங்க முடியாமல் மனிதர்கள் ஒட்டகத்தைக் கொன்று உள்ளேயுள்ள தண்ணீரை வடித்துக் குடிப்பார்களாம்.
அராபிய நாடுகளில் ( சவுதி, துபாய், கட்டார், பஹரின்) ஒட்டகங்களில் ஓட்டப் பந்தயங்களுக்கு நல்ல பணம் பரிசாக கிடைக்கும். அத்தோடு அதன் உரிமையாளனை எல்லோர் முன்னிலையில் பாராட்டுவார்கள். அதுஅவருக்கு பெரிய கெளரமாக நினைக்கின்றார்கள். இதனால் சூடான், எகிப்து, எத்தியோப்பியா, ஏமன் போன்ற நாடுகளில் இருந்து சிறுவர்களை அடிமைகளாக வாங்கி ஒட்டக ஓட்டிகளாக மாற்றுகின்றார்கள். சிறுவர்களை ஓட்டிகளாக மாற்றுவதன் காரணம் சிறுவர்கள் ஓட்டிகளாக இருந்தால் அதற்கு பாரம் அதிகம் இல்லாததால் விரைவாக ஓடும்.