Author Topic: தூக்கம் தூக்கமாக வருகிறதா எப்போதும் சோர்வாக இருக்கின்றீர்களா?  (Read 10 times)

Offline MysteRy


அடிக்கடி தூங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர் எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு இது என்ன காரணமாக இருக்கும்

பல்வேறு காரணமாக உடல்நலக் குறைபாடுகளால் இது ஏற்படுகிறது. சிலர் எதையுமே ஒரு ஈடுபாடு இல்லாமல் செய்து வருவார்கள். இதற்கு காரணம் உடலில் இரும்பு சத்து மிகவும் குறைந்து இருப்பதுதான். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதன் காரணத்தால் இவ்வாறு உடல் பலவீனம் அடைந்து விடுகிறது மேலும் உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தாலும் உடல் பலவீனமடையும் இந்த பிரச்சனையை சரிசெய்ய இறைச்சி பச்சை இலைக் காய்கறிகள் பயறு வகைகள் நட்ஸ் நீர்ச்சத்து கொண்ட பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

சீரான இடைவெளியில் சத்துப் பொருட்களும் மற்றும் புரதம் அதிகம் கொண்ட உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் பகலில்உடலில் சோர்வு ஏற்படாது காபி டீ ஆகியவை தவிர்த்துவிட்டு மூலிகை டீ வகைகளை குடிப்பது மிகவும் அவசியம் ஆர்வமின்மை கவனச்சிதறல் போன்றவை வைட்டமின் பி குறைபாடு இருக்கின்றது அதன் காரணமாக இந்த கவனச்சிதறல் ஏற்படுகின்றது மது பழக்கத்தை கைவிட்டுவிட்டு புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் .

காலை உணவை கண்டிப்பாக தவிர்க்கவே கூடாது வெறும் வயிற்றில் நீங்கள் நீண்ட நேரம் இருக்கவே கூடாது இதையெல்லாம் நீங்கள் செய்யாமல் இருந்தால் ஆரோக்கியமான உடலை நாம் பெற்றுவிடலாம் அதற்கு தேவை நல்ல இயற்கையான உணவுகள் சரியான நேரத்தில் உணவுகளை சரியான சிந்தனைகள், உடல் உறுப்புகள் இயக்கம், உணவுடன் உழைப்புகள், இது அனைத்தும் நீங்கள் பழகி வந்தால் உங்கள் உடல் உங்கள் மனம் உங்கள் உயிர் பலப்படும்.