Author Topic: அமுக்கரா கிழங்கு பலன்கள்/பயன்கள்:  (Read 12 times)

Offline MysteRy


ஒரிஜினல் கிழங்கு மட்டும் தான் பலன் தரும். அமுக்கரா கிழங்கு சூரணம் செய்ய தேவையான மூலிகைகள்:

அமுக்கராங் கிழங்கு 640 கிராம்,

சுக்கு 320 கிராம்,

திப்பிலி 160 கிராம்,

மிளகு 80 கிராம்,

தனியா 70 கிராம்,

சீரகம் 60 கிராம்,

இலவங்க பத்திரி 50 கிராம்,

இலவங்க பட்டை 50 கிராம்,

ஏலம் 30 கிராம்,

சிறுநாகப் பூ 20 கிராம்,

கிராம்பு 10 கிராம்.

அமுக்கரா கிழங்கு சூரணம் செய்முறை:

மேற்கண்ட மூலிகைகளை வாங்கி முறையாக சுத்தி செய்து வெய்யிலில் காயவைத்து தனிதனியாக இடித்து மெல்லிய துணியால் சலித்து மென்மையான தூளாக எடுத்துக் கொண்டு எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து மொத்த எடை அளவிற்க்கு சம எடை பனங் கற்கண்டு பொடியாக்கி கலந்து கண்ணாடி பாட்டிலில் காற்று பூக்காத படி இறுக மூடி பத்திர படுத்தி கொள்ளலவும்.
🌵
அமுக்கரா கிழங்கு சூரணம் சாப்பிடும் முறை:

காலை, மாலை உணவிற்கு பிறகு பால் அல்லது நெய்யிலோ 3 கிராம் அளவு கலந்து ஒரு மண்டலம் ( 48 நாட்கள் )சாப்பிட்டு வந்தால் கீழ் குறிப்பிட்ட பெரும் வியாதிகள் தீரும். அத்துடன் உடல் பலம் பெறும்.
🌵
அமுக்கரா கிழங்கு சூரணம் குணமாக்கும் நோய்கள்:

மேக அஸ்தி

அஸ்தி வெட்டை

மூச்சு தினறல்

ஈளை

பாண்டு

தோல் வியாதி

ஊறல்

நாவில் சுவையின்மை

ஆண் பலகீனம் ஆகியவை தீரும்

அடுத்து மிகவும் சக்தி வாய்ந்த அமுக்கரா கிழங்கு பால் சூரணம் செய் முறை பற்றி பார்கலாம்.
🌵
அமுக்கரா கிழங்கு பால் சூரணம்:

தேவையான மூலிகைகள்:

நாட்டு அமுக்கரா கிழங்கு 500கிராம்,

நாட்டு மாட்டு பால் 1 லிட்டர்,

நாட்டு அமுக்கராங் கிழங்கு 500 கிராம் வாங்கி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும், 1 லிட்டர் நாட்டு மாட்டு பாலை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அமுக்கராங் கிழங்கை போட்டு நன்றாக சுண்ட காய்சவும் பால் முழுவதும் சுண்டிய பின் எடுத்து வெய்யிலில் காயவைக்கவும், நன்றாக காய்ந்த பின் மீண்டும் 1 லிட்டர் நாட்டு மாட்டு பால் ஊற்றி சுண்டகாய்சி முன் செய்தது போல் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளலவும். பின் நன்றாக இடித்து மெல்லிய துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
🌵
அமுக்கரா கிழங்கு பால் சூரணம் சாப்பிடும் முறை:

மேற்படி சூரணத்தை தினம் காலை மாலை 3 கிராம் அளவிற்க்கு தேன், பால், நெய் ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட்டு வரவும். இந்த முறை சூரணத்திற்க்கு ஆற்றல் அதிகம் என்பதால் 3 கிராம் மட்டும் எடுத்துக் கொள்ளவும்
🌵
அமுக்கரா கிழங்கு பால் சூரணம் பயன்கள்:

உடைந்த எலும்பு விரைவில் கூடும்,

தேய்ந்த மூட்டுகளை மீண்டும் வலுப்படுத்தும்,

மிகச்சிறந்த உடல் தேற்றி,

ஆண்கள் இழந்த சக்தியை மீட்டு, கெட்டிபடுத்தும்

உடல் பலம் கூடும்,

உடல் எடை அதிகபடுத்தும்,

நரம்பு தளர்ச்சியை குணமாக்கும்,

சுறுசுறுப்பை தரும்,

அமுக்கரா கிழங்கு பால் சூரணம் நோயாலியின் உடல் தன்மையை ஆராய்ந்து சாப்பிட வேண்டிய நாட்களை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். ஆண் பெண் அனைவருக்கும் இது பொதுவான மருந்து. எலும்பு உடைந்தவர்கள் குறைந்தது 3 மாதம் சாப்பிட எலும்பு விரைவில் கூடும்.

மேற்கூறிய மூலிகை வகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சூரணத்தை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் மாத்திரை குப்பிகள் வாங்கி அதனுள் அடைத்து சாப்பிடலாம்.