Author Topic: ஒப்பிடுஙகள்.. மாறாதீர்கள்...  (Read 11 times)

Offline MysteRy


ஒரு ஊரில் ஒரு மயில் இருந்ததாம். அதே ஊரில் ஒரு வான் கோழியும் இருந்தாம். மயிலும் வான் கோழியும் ஒரே இடத்தில் வாழ்ந்தார்கள். தினமும் காலையில் எழுந்து உடன், மயில் தன் சிறகை விரித்து ஆடுமாம். அதை கண்டு தினம் வான் கோழி, தானும் தன் சிறகை விரித்து ஆட வேண்டும் என்று விரும்பியது. இதை அறிந்த வான் கோழி உறவினர்கள் வான் கோழியை கிண்டல் செய்தார்கள். அதை எல்லாம் பொருட்படுத்தாமல், வான் கோழி ஒரு நாள் தன் சிறகை விரித்து ஆட தொடங்கியது.

நாட்கள் செல்ல செல்ல மயில் போல தன் சிறகு இல்லை என்று வான் கோழிக்கு தோன்ற ஆரம்பித்தது. மயில் போல தன் சிறகை மாற்ற வரும்பியது. தினமும் தன் சிறகை இழுத்து இழுத்து பெரிதாக மாற்ற முயற்சி செய்தது . என்ன செய்தாலும் மயில் போல இல்லை என்று ஒரு நாள் வேகமாக சிறகை இழுத்து, ரத்ததோடு சிறகு கையோடு வந்து விட்டது. இருந்த சின்ன சிறகும் இல்லாமல் போய்விட்டது. மறு நாள் காலையில் வான் கோழி வரும் என்று நினைத்து கொண்டு இருந்த மயில், சிறகு இல்லாமல் இருந்த வான் கோழியை பார்த்து அதிர்ச்சி அடைந்து. என்ன ஆனது என்று மயில் வான் கோழியிடம் கேட்டதாம்..

"முதலில் உன்னை போல ஆட நினைத்தேன்.. பின்னர் உன்னை போல நான் மாற நினைத்தேன். அதனால் இப்படி ஆனது" என்று வான் கோழி கூறியது.

மயிலை போல வாழ நினைப்பது தவறில்லை…மாயிலாக மாற நினைப்பது தான் தவறு.

மயிலை போல ஆடுங்கள், மாயிலாக மாற முயற்சி செய்யாதீர்கள்…