கடவுள் செய்தது தவறா? சரியா ?
என்ற பட்டிமன்றத்திற்குள் நான் வரவில்லை !
என் ஒரு கருத்தை மட்டும் , திருத்தமாய் யாருக்கும்
உறுத்தலோ ,வெறுத்தலோ ,மறுத்தலோ இருக்காது எனும்
பெருத்த நம்பிக்கையோடும்
சிறு வருத்ததோடு தெரிவித்து கொள்கிறேன் !
இறைவன் ஒப்பிட முடியா உயர் சிறப்பம்சங்களுடன்
பெண்களை படைத்து பின் பெரும் ஓரவஞ்சனையுடன்
ஆண்களை படைத்து விட்டான் !