Author Topic: என்னத்த சொல்ல?  (Read 16 times)

Offline MysteRy

என்னத்த சொல்ல?
« on: Today at 08:58:36 AM »

கடன் கொடுத்தவன் ஒரே ஒரு கேள்விய வச்சுக்கிட்டு ரொம்பத் தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியோட உயிர் வாழ்றான்...
1. எப்போ தருவீங்க..?

கடன் வாங்கியவன் நிறைய பதில்கள வச்சிக்கிட்டு ஜாலியா குடும்பத்தோட ஊர் சுத்துறான்..

1. உன் பணத்த தூக்கிட்டு ஓடிட மாட்டேன்..

2. உன் காச புடுங்கியா தின்னுட்டேன்..

3. ஏன் பணம் பணம்னு அலையிற..

4. என்கிட்ட வாங்கி அப்படி என்ன பண்ணப் போற....

5. இப்போ என்ன அவசரம்?

6. இன்னுமா ஞாபகம் வச்சிருக்க?

7. ஏற்கெனவே கொடுத்துட்ட மாதிரி இருக்கே...

8. உனக்கு என்ன செலவு இருக்கப் போகுது..

9. ஒருதடவ கொடுத்துட்டு ஓராயிரம் தடவையா கேப்ப?

10. உன்ன ஏமாத்தணும்னு நினைக்கல..

11.கண்டிப்பா கைக்கு வந்தவுடன் குடுத்துடறேன்..

12.இப்போ விட்ரு அடுத்த மாசம் குடுத்துடுறேன்...

🥺🥺🥺🥺🥺

நீங்களாவது நல்லாருங்கடா டேய்...