Author Topic: இதெல்லாம் தெரிஞ்சா இனி பிஸ்கட்டை தொட்டுகூட பார்க்க மாட்டீர்கள்.! 🍞🍞  (Read 292 times)

Offline MysteRy



குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்குமே பிடித்தமான உணவு என்றால் அது கண்டிப்பாக பிஸ்கட் தான்.

ஆனால், பலருக்கும் இந்த பிஸ்கட்டுகளை சாப்பிடுவதன் காரணமாக நம்முடைய உடலுக்கு என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது தெரிவதில்லை. என்னென்ன ஏற்படும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பிஸ்கட்டில் உள்ள அதிகப்படியான சர்க்கரை முகப் பரு தோன்றுவதற்குக் காரணமாகிறது.

* பிஸ்கட் குறைந்த அளவு கரையும் நார்ச்சத்து கொண்டிருப்பதால் ஜீரணக் கோளாறு மற்றும் பேதி ஏற்பட வாய்ப்புண்டு.

* இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் அபாயம் உண்டு.

* பிஸ்கட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லாததால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.

* பிஸ்கட்டில் நீர்ச்சத்து குறைவாக உள்ளதால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் வருவதற்கு வாய்ப்புண்டு.

* பிஸ்கட் தயாரிப்பில் சேர்க்கப்படும் கூட்டுப்பொருட்களில் அலர்ஜி தரும் பொருள் ஏதாவது இருந்தால் ஒவ்வாமை ஏற்படக் கூடும்.

* குறைந்த அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

* சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் (trans fat) அதிகளவு பிஸ்கட்டில் உள்ளதால் இதய நோய் உருவாகும் வாய்ப்புள்ளது.

* பிஸ்கட் அதிகளவு கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

மேற்கூறிய பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அடிக்கடி அதிக அளவில் பிஸ்கட் உண்பவர்கள் கவனமாக இருப்பது நலம்.

ஒரு சிலர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லாததன் காரணமாக டீயை குடித்துவிட்டு இரண்டு பிஸ்கெட்கள் சாப்பிட்டாம் போதும் என்று நினைத்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதனால், நாளடைவில் வயிற்றுப்புண் செரிமானக் கோளாறு ஏற்படும்.

மேலும், அதில், சர்க்கரை கொழுப்பு அமிலங்கள் ஆகியவை, பிஸ்கட்டில் மிக அதிகமாக இருக்கின்றது. பிஸ்கெட் தயாரிப்பின் பொழுது, வெப்பநிலையில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் எத்தனை சதவீதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை.

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேரும் போது, கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகக்கூடும்.பிஸ்கட் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மற்றும் சுவைக்காக உப்பு அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இது உயர் இரத்த அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதெல்லாம் ஆய்வுகளின் மூலம் அறிய வந்துள்ளது.