Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 56158 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #150 on: July 17, 2025, 02:19:20 PM »
மெல்ல ஊதி ஊதி ,
அழகான பலூனை
மேலும் அழகாக்க நினைத்து
உடைத்தெறியும்
மழலை மனம் போல
பிடித்தவர்களிடம்
அன்பை
கையாளும்
நாம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #151 on: July 18, 2025, 05:38:29 PM »
யாரேனும்
நலம் விசாரித்தால்
ஒரு நொடி என்னுள்
தடுமாற்றம் !!
சில திணறலோடு ...
என்னை நானே தேற்றி
"நான் நலம்" என்னும்
முகத்திரையோடு
அந்த உரையாடலை முடிக்கிறேன்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #152 on: July 22, 2025, 12:26:23 PM »
எல்லா உறவுகளுக்கும்
ஏதாவது
பெயர் வைத்தே
ஆகவேண்டுமா என்ன !!

அந்த இருவருக்கு மட்டும் புரிந்தால்
போதாதா ?

இங்கு
சில பெயரில்லா
அழகிய உறவுகளும்
இருந்துவிட்டுப் போகட்டுமே !!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #153 on: July 24, 2025, 01:47:21 PM »
பரவாயில்லை
அன்பு  செலுத்துங்கள்
என்ன நடந்துவிடபோகிறது !
மீண்டும்
ஒரு மழை!
பெரு வெள்ளம் !
சிறு கண்ணீர்!
இருக்கட்டுமே
அது தானே
இந்த அற்ப வாழ்க்கையின்
அதீத அர்த்தம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #154 on: July 28, 2025, 02:01:55 PM »
நீங்கள் யாரையும்
வெறுக்க வேண்டிய
அவசியம் உங்களுக்கு இல்லை
பிடிக்கவில்லை என்றால்
அமைதியாக
விலகி விடுங்கள்

ஏனென்றால்
நிம்மதி
மிக முக்கியம்
உங்கள் வெறுப்புக்கு
முதலில் பலி ஆவது
உங்கள் நிம்மதி மட்டுமே !!

சிந்தித்து செயல்படுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "