Author Topic: விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?  (Read 35 times)

Offline MysteRy


விமானங்களின் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகவோ, வெடிக்கவோ செய்யாது. இது ஏன் ? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன ? இந்த தொழிற்நுட்பம் ஏன் கார்களில் இல்லை ? விமானங்களில் டயர்களும் கார்களின் டயர்களும் ஒன்றா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?

நீங்கள் காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட உங்கள் காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா விமானங்களில் டயர்கள் மட்டும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.

பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.

பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் டயருக்கு 200 Psi இருக்கும் அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைபோலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயீங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. இது சிறிய டிரக்கின் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்களில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாதது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொட்ட அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.

கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்க முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.